Posts

Showing posts from February, 2024

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
அறை இருந்த அடுக்ககத்தில் இருந்து நேராகச் சென்று ஒரு சிறு வளைவை அடையும் பாதை பேருந்து நிலையத்தைச் சென்றடையும். அடுக்ககத்தில் தொடங்கி ஏழில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது பேருந்து நிலையம். காலை ஏழு மணிக்கு அறையில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்குவேன்.  அப்பாதையில் சில தெருக்கள் குறிக்கிடுவதுண்டு. மேலும் அவ்வழியில் ஒரு உணவகம், சில அலுவலக வளாகங்கள், ஒரு சலூன் ‌உடன் அருகிலேயே ஓர் அண்ணாச்சி கடை ஆகியவை அமைந்திருந்தன. நேராகச் சென்றபின் பேருந்து நிலையத்தை நோக்கி இருந்த சிறு வளைவில் சின்னதாக மரத்தடி பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அங்கிருந்து இரண்டு நிமிட நடையில் பேருந்து நிலையம்.  வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடப்பது தான் எப்போதும் வழக்கம். சரியாக அண்ணாச்சி கடை அல்லது சலூன் அருகில் வரும்போது ஒரு இளைஞர் எப்போதும் என்னைக் கடந்து செல்வார். நல்ல உயரமான ஆண். திராவிட நிறம். இறுக்கமான முகம். முழுக்கை சட்டையை அணிந்து இடுப்புப் பகுதியில் சட்டையை மடித்துவிட்டுருப்பார். மேலும் ஒருபக்கம் மாட்டும் பையை நேர்த்தியாக மாட்டியிருப்பார். பார்த்த மாத்திரத்தில்  கூறிவிடலாம்

எழுத்தும் நானும்:

Image
கீழ் தளம் அல்லாது மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்ககத்தில் மூன்றாம் தளத்தில் இருந்த ஒரு சிறிய அறை அது. அறையின் உட்பகுதியில் அழகான பால்கனியில் சில செடி கொடிகள் அடங்கிய ஒரு தோட்டம் இருந்தது. ஆரஞ்சு வண்ணப்பூச்சுக்களோடு சுவர்கள் கொண்ட அந்த அறையில் ஒரு பக்கம் பால்கனி வாயிலும் அதன்  எதிர்திசையில் அறையின் நுழைவு வாயிலோடு வரிசையாக மூன்று சன்னல்களும் அமைக்கப்பட்டிருந்தது. நானும் தோழியும் அந்த அறையில் சில நாட்களாக இருந்து வந்தோம். தோழி அதிகமாக பயணம் மேற்கொள்பவள் என்பதால் அங்கு நான் மட்டும் தனிமையில் இருக்கும் சூழலே பெரும்பாலும் அமைந்தது. தோழியின் உடைமைகளோடு மாற்றி உடுத்திக்கொள்ள என் இரண்டு மூன்று ஆடைகளும் சில நூல்களும் அறையில் இருந்தன. காலை எழுந்து தோட்டத்துச் செடிகளுக்கு நீர் ஊற்றிவிட்டு குளித்து கல்லூரி கிளம்புதல், கல்லூரிக்கு பின் என் வேலைகளை முடித்து மாலை அறை திரும்புதல் என்ற அன்றாடங்களில் அச்சமயம் அந்த அடுக்ககத்தில் நான் பழகியிருந்த கணிசமான மனிதர்களில் மலர் அம்மா ஒருவர்.  மலர் அம்மாவிற்கு என் அன்னையின் சாயல். கருத்த தேகம். ஒல்லியும் பருமனும் அல்லாத உடல் வாகு. குரலும் அப்படியே. அதன

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
ஆசிரியப் பணியின் இடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பினை மேற்கொண்டிருந்தேன். மாலை பள்ளிவேளை முடிந்து கணக்கெடுப்புத் தொடங்கும். இப்பணி அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக வழங்கப்படுவது. நான் அரசு பள்ளியில் இருந்ததால் எனக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. இப்பணியால் நான் வாங்கும் ஊதியத்தோடு சிறுத் தொகை கூடுதலாகக் கிடைக்கும் என்பதால் நான் அதையும் மேற்கொண்டேன். கணக்கெடுப்பிற்காகச் செல்லும் ஒவ்வொரு தெருவிலும் நான் பணிசெய்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருந்தார்கள். அவ்வபோது என்னோடு அவர்களும் வந்து கலந்துக்கொண்டனர்.  என்னிடம் கணக்கெடுப்பிற்காக ஒரு கையேடு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் வீட்டின் எண், அவ்வீட்டில் வசிக்கும் மனிதர்களின் பெயர் வயது மற்றும் அவர்களது தந்தை அல்லது துணைவி/ துணைவன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்‌. அந்தத் தகவல்களைக் கொண்டு கணக்கினை மேற்கொள்ள வேண்டும். வீடு மாற்றல் காரணமாகவோ அல்லது இறப்பின் காரணமாகவோ இல்லாமல் போனவர்களை நீக்கி புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் மனிதர்களையும் இடைப்பட்ட வருடங்களில் பிறந்திருந்த பிள்ளைகளையும் கணக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும். பின் கையேட்டில் உ