Posts

Showing posts from June, 2023

TREES OF PEACE (Alanna Brown)

Image
நான் கல்லூரி பயின்றது சென்னையில். இங்கு ஒரு அரசு விடுதியில் தங்கிப் படித்தேன். என் விடுதி மூன்றடுக்கு கொண்டது. கீழடுக்கும் இரண்டாம் அடுக்கும் கல்லூரி இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டது. முதலடுக்கு முதுகலை மற்றும் ஆய்வியல் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஓர் அடுக்கில் முறையே பத்து அறைகள் இருக்கும். ஓர் அறைக்கு முப்பது மாணவிகள் வீதம் இருந்தோம். உணவிற்கு, உறக்கத்திற்கு‌,  நீருக்கு என்று நாங்கள் பட்ட பாடு இன்னும் கண்களில் மறையவில்லை.  விடுதியைப் பார்த்த முதல் நாளே 'படிப்பே வேண்டாம் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க' என்று அழ ஆரம்பித்துவிட்டேன். எல்லாமும் புதிது எனக்கு. அந்தக் கூட்டம் உட்பட. உறக்கத்தில் கையை நீட்டக் கூட உரிமை இருக்காது. உணவுக்கான வரிசையில் பத்து பதினைந்து பேரை தாண்டினால் சாப்பாட்டிற்குக் குழம்பு கிடைக்காது. காலை ஆறுமணிக்கு மேலானால் குளியல் அறை கிடைக்காது. காய்ந்த துணிமணிகளை எடுக்க தாமதமானால் நல்ல சுடிதாரோ மிடியோ திரும்ப கிடைக்காது. இப்படி ஒருமுறை என் கைபேசி தொலைந்தது. பிறகொருமுறை என் கடைசி இருநூறு ரூபாய். எதுவுமே போதாத ஒரு வா

Liar's Dice (Geetu Mohandas)

Image
வெளி மாநில பணியாளர்களின் நிலையை அழுத்தமாக பேசியிருக்கும் திரைப்படம்.  வெளியூர் வேலைக்குச் சென்ற கணவன் குறித்த எந்த தகவலும் சில மாதங்களாகவே இல்லாமல் போகிறது. கணவனைத் தேடி அவன் தந்துசென்ற முகவரிக்குச் செல்ல முடிவெடுத்து, தன் மூன்று வயது மகள் மற்றும் மகள் வளர்க்கும் ஆட்டுக்குட்டியோடு கிராமத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக நடக்கத்தொடங்குகிறாள் மலைவாழ் பெண். தன் கிராமத்தைத் தவிர்த்து வெளியுலகை அறிந்திராத பெண்ணுக்கு  வழிப்போக்கனாக வரும் ஒரு மனிதன் உதவுகிறான். முகவரி கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணின் கணவன் அங்கில்லை. டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது. டெல்லி சென்று தேடிப்பார்க்க எண்ணுகிறாள் அந்தப் பெண். அதே மனிதன் மீண்டும் உதவுகிறான். டெல்லி செல்லும் அவர்கள் அந்தப் பெண்ணின் கணவனைக் கண்டுபிடித்தார்களா என்பது படத்தின் இறுதிக்கட்டமாகிறது.  தன் உழைப்பு, தன் வீடு, மகள், தனது கிராமம் தவிர்த்து வேறெதையும் அறிந்திருக்காத ஒரு பெண் திடுமென தன் பயணத்தில் குறுக்கிடும் மனிதனை எப்படி நம்புவாள்? நீ யாரென்று எனக்குத் தெரியாது. நீ நல்லவனாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். உன்