Posts

Showing posts from May, 2023

சிலம்பும் - இறைவியும்

Image
அன்னை, மனைவி, காதலி, மகள், மருமகள், அக்கா, தங்கை, தோழி, கடந்து செல்லும் யாரோ ஒருத்தி, காசுக்காக உடன் படுக்கும் விபச்சாரியானாலும் முதலில் அவள் பெண். ஆடை, ரத்தம், சதை தாண்டிய ஒரு பெண்.  எழுதப்பட்ட காப்பியத்தில் ஒரு கண்ணகி. ஆனால் இங்கு எழுதப்படாத எத்தனையோ காப்பியங்கள் நாள்தோறும் நிகழ்ந்துக்கொண்டே தான் இருக்கின்றன. கண்ணகிகள் பிறந்துக்கொண்டே தான் இருக்கின்றனர்.  முதுகலை பயிலும்போது ஏன் அதற்குப் பின்னதாய்கூட எனக்குப் பிடித்த பாடமென்றால் அது "சிலப்பதிகாரம்" தான். இப்படம் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு இதுவே பெரிய காரணம். இப்படத்திற்கு  பின்னதாக ஏற்பட்ட தெளிவுதான் எனையே எனக்குக் காட்டியதும்.  மழை இப்படத்தின் முதன்மையான ஒரு பாத்திரமாகியிருக்கிறது. ஆம், மழை என்பவள் தான் பெண். கண்களில் எதிர்காலம் குறித்த கனவுகளோடு வாழும் துறுதுறுப் பெண். தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்காலத்தை அனுபவிக்கத் தயாராகும் புதுமைப் பெண். கணவனின் கொடுமைகளைத் தாங்கித் தன் பிள்ளைகளுக்காய் வாழ எத்தனிக்கும் கனிவானப் பெண். கையிருப்பு வாழ்க்கையை ரசிக்கக் காத்திருக்கும் நவீனப் பெண். மழைக்கேது வகைகள். இ

அறைகூவல்

Image
நிலம் தொடங்கி நீர் நெருப்பு பூமி என அனைத்தையும் பெண்ணாகவும் தாயாகவும் கற்பித்துப் போற்றித் துதிக்கும் மனிதனுக்கு உண்மையாகவே வாழும் பெண் என்பவள் யார்? அவளின்  பங்கு என்ன என்ற ஓர் ஆழ்ந்த சிந்தனையை ஓடவிட்டால் எத்தனை தூரம் அது நீண்டாளும் பதில் ஒன்று தான். பெண் என்பவள் அடிமை. அவள் சிந்தனையிலும் உணர்விலும் செயல்பாடுகளிலும் அப்படி இருப்பது தான் ஆண்மைய சமுதாயத்திற்கு வசதி.  பெண்கள் முன்னேற்றம் காணத் தொடங்கி ஒரு நூற்றாண்டை கடந்திருந்த போதிலும் ஏதாவது ஒரு சூழலால் ஏதாவது ஒரு காரணத்தால் ஏன் எது ஒன்றிலுமே அவள் அடிமையாகத்தான் இருக்கிறாள். காதலித்தால் கொலை. காதலுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொலை. தனித்திருந்தால் வன்கொடுமை. வன்கொடுமைக்கு காரணம் அவள் உடுத்தும் ஆடை என்ற விளக்கம். சரி இது எல்லாவற்றிலுமிருந்து எப்படியாவது தப்பித்து வந்தால் திருமணம், வரதட்சணை. மணமான எல்லாப் பெண்களாலும் துணிந்து சொல்லவாவது இயலுமா? திருமணத்தோடு ஒரு பெண்ணின் அத்தனை துயரமும் முடிந்தது என்று. முடியாது. இங்கு குறிப்பிடப்படும் குடும்ப முறையில் ஒரு பெண்ணின் பங்கு என்ன?  வீட்டின் வேலைகளை செய்ய, பிள்ளைகளை

LOVE IS LOVE

Image
சென்னை வந்திருந்த புதிது அது. ஆறு மாதங்கள் வரை கடந்திருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை வரும்வரை சொந்த ஊரிலேயே எங்குமே தனியாக சென்றிடாத நான் சென்னையில் முற்றிலுமாக தனித்துவிடப்பட்டேன் என்ற உணர்வு முழுமையாக  ஆக்கிரமித்திருந்தது. எங்குச் சென்றாலும் ஒருவித பயம். யாரோடும் பழகத் தயக்கம். இதற்கிடையில் பகுதிநேர வேலைக்காக ஒரு பதிப்பகத்தில் சேர்ந்தேன். அங்கு என்னோடு ஒன்றிரண்டு பெண்களைத் தவிர அனைவரும் ஆண்கள். ஒருவார காலம் சென்றிருக்கும். பதிப்பகம் வந்த ஓர் இளைஞர் பணப் பெட்டியைத் திறந்ததற்காய்ச் சற்று கோபத்தோடு முறைத்து "யார் நீங்கள் புகார் அளிப்பேன்"  என்று கடிந்துகொண்டேன். பிறகுதான் தெரிந்தது என்னைப்போல் அவரும் அந்தப் பதிப்பகத்தில் ஒரு பணியாள் என்று. பிறகு "கைபேசியைத் தவறி எங்கோ  வைத்துவிட்டேன் ஒரு அழைப்பு விடுங்கள்" என்றார் அந்த இளைஞர். இப்படித் தான் எண் பகிரப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து வந்த புத்தாண்டின் இரவு, வாழ்த்திற்குப் பதிலாகக்  காதலுரைத்துக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார் அந்த இளைஞர். பார்த்தேன். பதிலுரைக்கவில்லை. மறுநாள் பதிப்பகத்தில் இனம்புரியாத மகிழ்ச்ச