Posts

Showing posts from April, 2023

MEMOIRS OF GEISHA

Image
Memoirs of Geisha தெளிந்த நீரோடையாக, நிசப்தமான நிலைக்கண்ணாடியாக காட்சியளிக்கும் காலம் தன்னகத்தே எண்ணற்ற இரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. நிகழ்ந்தவற்றின் மீதோ நிகழ்பவற்றின் மீதோ காலத்திற்கு எந்தப் பற்றும் பரிவும் இல்லை. கடந்து போய்க்கொண்டே இருப்பது காலம்.  வரலாற்றின் பின்னணியில் எந்த ஒன்றையும் அறிய குறிப்பாய்ப் பெண்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ள நூல்களே சிறந்த ஆவணமாக இருந்துள்ளது. இப்போது திரைப்படங்களும் அதில் இணைந்திருக்கின்றன. அந்த வகையில் 1997 ல் வெளியாகியுள்ள Arthur Golden எழுதிய 'memoirs of Geisha' என்னும் நூல் அதே பெயரில் Rob Marshal என்பவரால் 2005 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1929 ல் நடைபெறுவதாகக் கூறப்படும் இக்கதை நிகழும் காலகட்டத்தின் முன்பிருந்தே இப்படியான Geisha முறைகள் கீழை நாடுகள் பலவற்றில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே பழக்கத்திலிருந்த இம்முறையில் கெய்ஷா என்பவர் ஆடல் பாடல் இசை மருத்துவம் போன்றவற்றை முறையாக கற்றறிந்து தேர்ந்திருப்பவர். சமூகத்தில் முக்கியமான செல்வந்தர்களையும் அரசாங்க பிரமுகர்களைய

PATERSON

Image
வழக்கமாகச் செல்லும் துணிக்கடையின் ஆண்கள் மேற்சட்டைகளுக்கான பிரிவில்  ஒல்லியான நபர் ஒருவர் இருப்பார். அடிக்கடி பார்த்திருக்கிறேன்.  எடுத்த மேற்சட்டையைப் போட்டுப்பார்க்க கார்த்திக் சென்ற நேரம் நானும் மௌனியும் வண்ணங்களைக் கூறி விளையாடிக்கொண்டிருந்தோம். எதிரில் இருந்த கண்ணாடியில் நான் மேற்குறிப்பிட்ட மனிதர் ஏதோ ஒரு துண்டுச்சீட்டில் வார்த்தைகளை அடுக்கி அடுக்கி ஒரு மெல்லிய புன்னகையோடு எழுதிக் கொண்டிருந்தது தெரிந்தது. நான் அந்த நபரைப் பார்ப்பதை அடுத்த முனையில் வேட்டிக்கான பிரிவில் இருந்த இன்னொரு நபர் பார்க்க 'உன் கவிதையெல்லாம் அப்புறம் எழுதிக்கலாம் கஸ்டமர பாரு' என்று கொஞ்சம் சத்தமாகக் கூறினார். அவர் குரல் வந்ததும் அவசரமாகத் துண்டுச் சீட்டை எடுத்து தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் திணித்துக்கெண்டு கலைந்திருந்த சட்டைகளை மடிக்கத் தொடங்கினார் அந்தக் கவிதை நபர்.  ஒரு கவிஞரின் அல்லாடல் இது. எப்போதும் வேறொரு உலகில் சஞ்சாரித்துக்கொண்டிருக்கும் உயிர்கள் அவர்கள். அந்த உலகில் அவர்கள் மட்டும் தான். அங்குக் கடவுள் சாத்தான் இரண்டு முகங்களும் அவர்களுக்கானதே. நிகழும் யாவும் அவர்களாலேயே ஆட்டுவிக்கப்படுவத

ABBAS KIAROSTAMI

Image
#AbbasKiarostami (Iranian film director) அப்பாஸ் அவர்களின் திரைப்படங்கள் கொந்தளிப்புகளின் முடிவில் தியான விழிப்பைத் தர வல்லவை. அல்லது  மயக்கத்தை அமைதியென்று நம்பும் புலன்களின் மேல் பெருங்கல்லை எறிய விழைவது. எளியவர்களின்  வாழ்க்கையை கண்ணெதிரில் காண்பதுபோன்ற தோற்றத்தைத் தனது கதைசொல்லல் வழியே காட்டுவதாலேயே அப்பாஸ் சினிமா விரும்பிகளால் பெரிதும் கொண்டாடப்பட்டவர். இன்றும் கொண்டாடப்படுபவர்.  இவரது அனைத்துப் படங்களிலும் பயணமும் பயணத்தில் தன்னைத்தானே அவிழ்த்துக்கொள்ளும் வாழ்க்கையின் விரல்களாக உரையாடல்களும்  இருக்கும். திடீரென்று தோன்றி மிக உயரிய கருத்துக்களைச் சாதாரணமாகச் சொல்லிச் செல்லும் கதாபாத்திரங்கள் இவருடையவை. 'டென்' படத்தில் ஒரு சிறுவனுக்கும் தாய்க்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் சமூகத்தில் பெண் நிலையையும் பெரியவர்கள் குறித்த  சிறுவனின் பார்வையும் வெடிப்புறக் கிளம்பும்.  'Like someone in love'  திரைப்படத்தில் வீட்டிற்கும் தன் காதலனுக்கும் தெரியாமல்

CLOSE

Image
 Close: (2022) #LukasDhont (Belgian film director) பருவங்களில் மிகவும் ஆபத்தானது பதின் பருவமாகத்தான் இருக்கும். நெருக்கத்திற்கும் விலகலுக்கும் சரிவர பொருளறியாத பருவம் அது. தனக்குள் பல காரணிகளால் ஏற்படும் எண்ணற்ற போராட்டங்களைக் கடந்து வந்தால் மட்டுமே இப்பருவத்தில் வாழ்வு நிச்சயம்.   எட்டாம் வகுப்பு படிக்கும்போது அது அரசு நடுநிலைப் பள்ளி என்பதால் முருகன் வாத்தியார் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார் "இங்கலாம் நீ குப்ப கொட்றது சுலபம் அடுத்து பெரிய ஸ்கூல் போகப் போற அங்க போய் படிச்சி தேறினா மட்டும் தான் உனக்கு வாழ்க்கை சரியா இருக்கும் புரிஞ்சிக்க" என்று.  உண்மையிலேயே அடுத்து மேனிலை கல்விக்காக சேர்ந்த பள்ளி ஊரிலேயே மிகப்பெரிய பள்ளி. நான்காயிரம் மாணவிகள் இருந்தனர். நூற்றுக்கணக்கில் ஆசிரிய பெருமக்கள்.  அங்கு நான் வெறும் துகள் என்பதுதான் சரியான பொருத்தம். அப்போதிருந்த தலைமை ஆசிரியர் சற்று கடுமையான பேர்வழி. புதிய மாணவிகளின் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்பிற்குமான மாணவிகளைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி பட்டியல் தயாரித்தார். ஒரே பள்ளியில் இருந்து வந்த மா