Posts

Showing posts from November, 2023

Radiance (Naomi Kawase)

Image
ஒரு திரைப்படத்தைப் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு விளக்க என்ன செய்யலாம். வெறுமனே கதைக்கூறல் போதுமானதா? அப்படியானக் கதைக்கூறலால் ஒரு முழு திரைப்படத்தையும் அவர்களால் உணர்ந்துக்கொள்ள கூடுமா? முடியாது. கலைக்கு முன்னிருக்கும் யாருமே பார்வையாளர்கள் தான். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு திரைப்படத்தை எவ்வாறு விளக்கலாம், அப்படியான விளக்கத்தில், பார்வையற்றப் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு எப்படியாக அமையும், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய எவ்வளவு உழைப்புத் தேவைப்படுகிறது என்பதை குறித்து ஆராய்கிறது இப்படம்.  முழு திரைப்படத்திலும் ஒரு சிறியக் காட்சிக்கூட திரையில் தோன்றவிடாமல் அந்தப் படத்தின் வசனங்களுக்கு பார்வையாளர்களின் முகப்பாவனைகளை மட்டும் வைத்து "சிரின்" (Shirin 2008) திரைபடத்தை உருவாக்கியிருப்பார் இரானிய இயக்குநர் Abbas Kiarostami. படத்தின் உணர்வுகள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் பெண்களின் முகங்களின் வழி பிரதிபலிக்கும் நமக்கு. முதல் முறை சிரின் திரைப்படத்தைப் பார்ப்போருக்கு எத்தனை வினோத முயற்சி என்று வியக்கத்தோன்றும்.  ஆனால் இச்சூழல் மாறுபட்டது. பார

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

Image
கதை ஒரு மனிதனின் வாழ்வோடு பிணைந்த ஒன்று. சிந்தித்தால் நமக்கு கூறப்பட்ட, இன்னும் கூறப்படாத கதைகள் எல்லாம் யாரோ வாழ்ந்த, வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்வாகவே இருக்கும். ஒரு கதை கேட்ட மாத்திரத்தில் அதன்  இயல்பில் இருந்து பூதாகரமாகி கட்டற்று திரிந்த காலமென்றால் அது மனிதனின் பால்யமாகத்தான் இருக்கும். என் பால்யம் அப்படியானதில் தான் என் வாழ்வும் முழுமையை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.  எனக்கு தந்தை வழி பாட்டிகள் இருவர். அதில் மூத்தவர் கிருஷ்ணம்மாள். இப்போது நினைத்தாலும் அவளது முந்தானையின் எண்ணெய் பிசுகு வாடை நினைவெழும் எனக்கு. அவள் பிசைந்தூட்டிய பிடி சோறு, என் உறக்கத்திற்காக அவள் பாடிய தாலாட்டுப் பாடல், மாலையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் மடிசாய்த்துக்கொண்டு அவள் உறைத்த மாயக்கதைகள்.. தன் தகரப்பெட்டிக்குள் எனக்காக சேர்த்திருந்த இளஞ்சிவப்பு சில்க் புடவை.. இப்படி என் பால்யம் முழுவதிலும் அவள் வாசனை ஏராளம்.  மிக மெல்லிய குரல் அவளுக்கு. அப்போது தான் பிறந்திருந்த ஒரு குட்டிப்பூனையின் குரல் அது. தடிமனான அரசாங்கம் அளித்த கறுப்பு  நிற கண்ணாடி ஒன்றை எப்போதும் அணிந்திருக்கும் பாட்டியின்