Posts

Showing posts from December, 2023

Elle (paul verhoven)

Image
2016 ல் வெளியான ஃப்ரெஞ்ச் மொழி படம். (Elle - அவள்) Philippe Djian எழுதிய "Oh..."  நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் நடுத்தர வயது ஒரு பெண் முகமூடி அணிந்த ஆண் ஒருவனால் அடித்துத் துன்புறுத்தப்பட்டுக் கற்பழிக்கப்படுகிறாள். இப்படித்தான் படம் தொடங்குகிறது. சில காயங்களோடு மீண்டவள், நடந்தது என்ன? ஏன்? யாரிந்த மனிதன்? எனச் சிந்திக்கலாகிறாள். படம் நீள்கிறது.  பல இளைஞர்கள் பணிபுரியும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கும் பெண் அவள். கணவனைப் பிரிந்துவாழும் 'ஒற்றைத் தாய்'. கடின உழைப்பால் சமூகத்தில் நல்ல மரியாதையை ஈட்டிய பெண்மணியாக வாழ்ந்துவருகிறாள்.  நடந்ததை‌ குறித்து நண்பர்களிடம் பகிர்கிறாள். காவல் நிலையம் சென்று புகார் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. காவல் நிலையத்தின் மீது நம்பிக்கை இல்லை என மறுக்கிறாள். கையில் துப்பாக்கி வைத்துக்கொள் என நண்பர்களால் அறிவுறுத்தப்படுகிறது. துப்பாக்கியில் சுடக் கற்றுக்கொள்ள முடிவெடுக்கிறாள். உறங்கும் முன் மீண்டும் இப்படி நடந்தால், கையில் கிடைக்கும் எதையாவது எடுத்து அடித்தே அம்மனிதனை கொல்வதுபோன

Joyland (Saim Sadiq)

Image
ஆதி காலத்தில் பெண்கள் பிள்ளைகளைப் பெற்று பேணிக் காப்பதிலும் தன் வாழ்விடத்தைச் சுத்திகரித்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலும் முழு காலத்தையும் கழித்தார்கள் என்பது வரலாறு. காரணம் பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாள முடியும். அனேகமாக அந்த பொறுப்பினை அவர்களாகவே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். வேட்யையாடுதலைக் காட்டிலும் மிகவும் சிரத்தையான இப்பணிகள் பிற்காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. திருமணம் என்ற குடும்பமுறை சடங்கின் அடிப்படையில் ஒரு பெண் மீதான அத்தனை அடக்குமுறைகளும் இன்றுவரை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது மறுப்பதற்கில்லா உண்மை. இதற்கு மாறாக அப்போதே அவள் வேட்டையாடுதலை தேர்வு செய்திருந்தால் மனிதர்களின் தோற்றத்திலும் அதனால் ஏற்படக்கூடிய சமூக முன்னேற்றத்திலும் கணிசமான தோய்வு ஏற்பட்டிருக்கலாம்.  படம் பேசுகிறது: பழமை மாறாத ஒரு ராணா குடும்பத்தில் நிகழும் சில சம்பவங்கள் தான் இந்தப்படம். (ராணா என்பது குடும்பப் பெயர்.)  ஒரு பெண்ணுக்கு தான் தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் பிள்ளை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அது அவளது பிள்ளை தான். இந்

நினைவோடை ( தொடர்ச்சி)

Image
ஒரு ரம்மியமான காலை அது. வேலைப்பழுவை சற்று தள்ளி வைத்துவிட்டு டீ டம்ளரோடு வகுப்பறைக் கதவோரம் வந்து நின்றேன். வார்த்தைகளற்ற கவிதையொன்றினை போல் விரிந்து கிடந்தது வானம். பிறகுதான் கவனித்தேன் கதவோரம் இருந்த படிகளில் அவன்! அழுதழுது அவன்‌ கண்கள்‌ வீங்கிச் சிவந்திருந்தன. காலை பிரார்த்தனை கூட்டத்திற்கு பிறகு ஒரு நடுத்தர வயது பெண், முகத்தில் அத்தனைக் கோபத்தையும் அப்பிக்கொண்டு கையில் நீண்ட கம்புடன் ஒரு சிறுவனை உருட்டி மிரட்டி அழைத்துவந்து பள்ளியில் விட்டுவிட்டு கிளம்பிச் சென்றிருந்தார். அனேகமாக அச்சிறுவன் இவனாக இருக்கக்கூடும். அவள் இவனது உறவுப்பெண்ணாக இருக்கலாம் எனத் தோன்றியது.  விசும்பிக்கொண்டிருந்த அவனருகில் சென்று அமைதியாக அமர்ந்தேன். என்னைக் கண்டதும் அவன் சற்றுத் தள்ளி அமர்ந்து முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். நானும் விடுவதாக இல்லை. அவனருகில் நகர்ந்து சென்றேன். அவன் என் பக்கம் முகம் திருப்பாமல் வீம்பாக அமர்ந்திருந்தான். தேநீரின் முதல் மிடறோடு மெல்ல பேசத்தொடங்கினேன்.  "உன் பேரென்ன?" ஒரு பதிலுமில்லை. "எங்கருந்து வர?" பதிலில்லை. சில நிமிடங்கள் மௌனம். "

நினைவோடை

Image
கீதா மிஸ்.. சிறுவன் அழைத்ததன் பொருட்டு திரும்பினேன். என்ன பா.. இங்க‌ வாயேன்.. என்றான். ம்... வந்தாச்சு.. இரண்டு அடிகள் முன் சென்றேன். இங்க உக்காரு கீதா மிஸ்..  ம்ம் கொட்டிக்கொண்டே உக்கார்ந்து பின் என்ன வேணுமாம் சாருக்கு என்று வார்த்தையை நீட்டினேன். நா.. உனக்கொரு கத சொல்லவா..? என்றான். கதையா...? ம்ம்ம் சரி சொல்லு.. கேட்போம்... ஒரு ஊருல.....   .... என்று தொடங்கியவன் சற்று நிறுத்தி  ஆமா... எனக்கு மூனு கத தெரியும்.. உனக்கு எந்த கத வேணும்.. என்றான். மாத தேர்வு அப்போது தான் முடிந்திருந்தபடியால் தேர்வு பேப்பரை எடுத்து திரித்திக்கொண்டே பதிலுரைத்தேன். மூனு கதையா..? என்னென்ன கத? ஒரு காக்கா கத, ஒரு ராஜா கத, அப்புறம் மூனுகண்ணி கத.. உனக்கு எது வேணும்.. என்று மூன்று விரல்களை காட்டினான். மூனுகண்ணியா..? நல்லாருக்கே எனக்கு அதுவே சொல்லு.... என்றபடி திருத்தத்தில் புகுந்தேன். சரி.. நான் சொல்லுவேன் நீ உம் சொல்லனும் சரியா.. உம்.. சரி..  ஒரு ஊருல ஒரு பெரிய வீடு இருந்ததாம்.. அந்த வீட்டுல மூனுபேரு அக்கா தங்கச்சிங்க இருந்தாங்களாம். அதுல ஒருத்தி பேரு மூனுகண்ணியாம்...  பாவம் அவ.. அவங்க வீட்டுல யாருமே