Posts

Showing posts from September, 2023

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
வழக்கமாகப் பேருந்து பயணங்களில் ஓட்டுநரின்‌ பின் ‌இருக்கையில் அமர‌ வேண்டும். வேறெங்கும் இடையில் இறங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் ஒரு அழைப்பைத் தர வேண்டும் என்பதெல்லாம் வீட்டின் அன்புக்கட்டளைகள். என் பாதுகாப்பிற்காகத்தான் என்று ‌உணர்ந்திருந்ததால் இதையெல்லாம் மீறவும் தோன்றியதில்லை. இக்கட்டளைகளில் மிக முக்கியமானது இரவுப்பயணம் கூடாது என்பது.  சென்னையில் இருந்து வீட்டிற்குச் செல்லும்போது இரவுப்பயணங்கள் தான் சரியாக இருக்கும். அதனால் சில முறை வீட்டிற்குத் தெரியப்படுத்தாமலேயே சென்றுவிடுவதுண்டு. அப்படி ஒருமுறை தேர்தல் சமயத்தில் சென்னையில் இருந்து ஊருக்குச் செல்ல கோயம்பேடு வந்திருந்தேன். மணி பத்தைக் காட்டியது. பெரும்பாலும் பேருந்தே இல்லை. வெகு நேரமாக  பலர் பேருந்துக்காகக் காத்திருந்தனர். மணி பதினொன்றானது. பேருந்து ஒன்றுகூட இல்லை. விழுப்புரம் சென்று அங்கிருந்து மாறும் நோக்கத்தோடு சிலர் விழுப்புரம் பேருந்துகள் நிற்கும் இடத்திற்குச் சென்று பார்த்தனர். பயனில்லை.  பையில் எப்போதும் எதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பேன். அன்று பாடப்புத்தகமான இலக்கிய வரலாறு இருந்தது. படிக்கலாம்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

Image
கம்யூனிசத்தில் இணைந்த காலகட்டத்தில் சில நண்பர்களின் அறிமுகம் கிடைத்திருந்தது. அந்த சமயங்களில் ஒரு நண்பர் தான் ஒரு கவிஞர் என்று என்னிடம் அறிமுகம் ஆனார். பார்க்க நல்ல படித்த நாகரிகமான ஆளாக இருந்தார். என் தோழி அவரிடம் எனக்கும் கவிதை மேல் விருப்பம் உள்ளது என்று முன் எப்போதோ தெரிவித்ததாக என்னிடம் கூறினாள். வந்தவர் அப்படியே அமர்ந்துவிட்டார். அந்த இடம் ஒரு பூங்கா. உண்மையாகவே எனக்குக் கவிதை மேல் மிகுந்த ஆர்வம் தான். ஆனால் பழக்கமில்லாத ஆணோடு அமர்ந்து பேசுமளவிற்கு கவிதை அறிவு இல்லை என்றே தோன்றியது.  ஒரு தற்காப்பிற்காக இப்படி அறிமுகம் ஆகும் மனிதர்களை அண்ணா என்று அழைத்து விடுவதுண்டு. சிலர் பரவால மா அண்ணா எல்லாம் வேண்டாம் பேர் சொல்லியே கூப்பிடுங்க என்று தங்களின் பெருந்தன்மையைக் காட்டுவார்கள். பலர் அச்சச்சோ அவ்வளவு வயசாகலமா என்று பேச்சை வளர்ப்பார்கள்.  அப்படித்தான் அன்று அந்தக் கவிஞர் அண்ணாவாகினார். தான் எழுதியதாகக் கூறித் தன் பையிலிருந்த ஒரு நோட்டை எடுத்து சில நெடுங்கவிதைகளை வாசிக்கத்தொடங்கினார். எங்கள் இருவருக்கும் ஒன்றுமே ஒட்டவில்லை. புரியவும் இல்லை. நானும் தோழியும் ஏதோ போல் அமர்

Drive My Car (Ryusuke Hamaguchi)

Image
Drive My Car Ryusuke Hamaguchi இயற்கை இயங்கியவாறே இருக்கிறது  சுழற்சியின் அடிப்படையில். ஆனால் ஏதோ ஒன்றின் மீதான பற்றைத் தானே எடுத்துக்கொள்வது மனித இயல்பு. சொல்லப்போனால் மனித வாழ்விற்கு அதுவே ஏதுவாகவும் அமைகிறது.  அந்தப் பற்று சற்று நழுவும்போது குற்ற உணர்வாக உருப்பெற்று விடுவதுண்டு. வாழ்க்கையில் மனிதனை ஆற்றுப்படுத்தும்  காரணிகளில் குற்ற உணர்வும் ஒன்று. தனது 22வது வயதில் என் தம்பி தற்கொலை செய்துகொண்டான். தற்கொலைக்கும் அவன் இறப்பிற்கும் இடையில் 30 நாட்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை  மூவாயிரம் இறப்புக்குச் சமம். விவரிக்கும் திராணி இல்லை இப்போதும் எப்போதும். அவனது இறப்பிற்குப் பின் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரை நான் எதிர்கொண்ட கேள்விகள் தாங்கொணாக் குற்ற உணர்விற்குள்  தள்ளின. "இப்படிப் பண்ணிட்டிங்களே" , "இப்படி ஒரு பையனை விட்டுட்டிங்களே" இப்படியாகப் பல கேள்விகள். இழப்பைச் சந்தித்த ஒரு குடும்பத்தின் துயரம் சொல்லொணாத ஒன்று. மூன்றாம் மனிதர்களான அவர்களுக்கு தோன்றிய கேள்விகள் என் நிலையில் இருந்து சிந்திக்கவே முடியாது. கொந்தளிக்கும் காயத்தைத் திரும்பத் திரும்பக் கீறி