Posts

Showing posts from August, 2023

கோசலை

Image
கோசலை (2022) - தமிழ்ப்பிரபா   நீலம் பதிப்பு  இந்த நூலை கடந்த மூன்று மாதங்களாக வாசிக்கிறேன். எப்போதும் வாசிக்கும் நூலை தலையணைக்கு அருகில் வைத்திருப்பது வழக்கம். 200 பக்கங்கள்  கொண்ட ஒரு நூலை வாசிக்க எதற்காக மூன்று மாதங்கள் என்று கேட்கலாம் தான். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரம் போதாமல் அடுத்த நாளிடமிருந்து இரண்டொரு மணி நேரங்களைக் கடன் வாங்கி ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான அம்மாவாக இருப்பதால் மூன்று மாதம் தேவையானது. இந்த மூன்று மாதங்கள் கோசலை என்னோடு சேர்ந்தே  உறங்கியிருக்கிறாள். பலநேரங்களில் நானும் மௌனியும் கோசலையோடு விளையாடியிருக்கிறோம். சிலவேளைகளில் கோசலையோடு மதிய உணவு உண்டிருக்கிறேன். கோசலைக்கும் மொட்டைமாடியில் நின்று விசும்பாடும் மேகங்களைப் பார்க்கப் பிடிக்கும் என்பதுதான் அவள் மீது எனக்கு அத்தனை வாஞ்சையை ஏற்படுத்தியது. அவள் ஒரு பெண். என்னைப்போல்  என் தாயைப்போல் நான் சந்திக்கும் பார்க்கும் வியக்கும் பெண்களைப் போல அவளும் ஒரு சராசரி பெண். அந்த முழுமையைத்தாண்டி  கோசலையிடம் எந்த ஊனத்தையுமே நான் உணரவில்லை. தன் குழந்தையைச் சுமக்கும்போது பெருத்த வயிற்றினைத் தாங்கமுடியாமல் தவித

Madeinusa (2005)

Image
Madeinusa:  புகழ்பெற்ற ஸ்பேனிஷ் திரைப்படமான The Milk of Sorrow இயக்குநர் Claudia Llosa (Peruvian film director) அவர்களின் முதல் திரைப்படம் இது.  எந்த விதமான முன்னேற்றமும் அதுவரை கண்டிராத ஒரு குக்கிராமத்தில் நடைபெறும் சடங்கு முறையைக் கொண்டு அக்கிராமவாசியான ஒரு பெண்ணின் வாழ்வை அழுத்தமாகப் பேசுகிறது இத்திரைப்படம்.  இயற்கையின் பேரழிவுகளைக் கண்டு அஞ்சிய மனிதன் அதைத் தொழ ஆரம்பித்து பின்னர் அதற்கென உருவம், பெயர் எனச் சூட்டி வழிபட தொடங்கினான். இப்படித்தான் கடவுள் உருவாகியிருக்க வேண்டும் என்கிறது வரலாற்றாய்வு. இறைநம்பிக்கை அது சார்ந்த சடங்குகள் நிலத்திற்கு ஏற்றார்போல மாற்றம் கண்டிருந்தாலும் அடிப்படை ஒன்றுதான் என்பது புனித நூல்கள் உரைக்கும் உண்மை.  கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் எந்தவிதமான நெறிப்பிறழ்வும் இன்றி வாழும் இந்த உலகில், இறை ஒன்றே தங்கள் வாழ்வில் எல்லாம் என்று நம்பும் மனிதர்கள் தான் மிகுதி. அம்மனிதர்களின் வாழ்வில் இறைவன் என்பவன் சில நாட்கள் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிந்தனையை காட்சிகளாக விரிக்கிறது திரைப்படம்.  உலகெங்கும் கிறித்துவ மதத்தில்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

Image
சொந்த ஊர் வந்திருந்த சில நாட்களிலேயே பி.எட் கல்விக்காக சாரதா கல்லூரி சேர்ந்திருந்தேன். கற்றல் கற்பித்தல் பயிற்சியில் சில நாட்கள் கடந்தன. அப்போது தான் முதன்முதலில் முகநூல் அறிமுகமாகியது. எழுதுவது ஒருவகை விடுதலை வெளிப்பாடு என்றே கருதுகிகிறேன். சற்றுக்கூடுதல் சலுகையாக என்ன எழுதினாலும் அதற்கான கருத்துக்களும் பின்னூட்டங்களும் உடனே கிடைப்பது இன்னும் மகிழ்வைத் தந்தது. அப்படித்தான் கவிதைகள் எழுதிப் பழகும் ஒரு வெளியாக முகநூல் மாறியது. நாளடைவில் காலத்தின் வேகமான சுழற்சிக்கு ஏற்ப ஒரு நிமிடத்திற்குள் படித்துவிட்டுக் கடப்பதைப்போல சிறு சிறு கவிதைகள் கைவசமாகின.  நண்பர்கள் சிலர் கவிதை குறித்து நல்ல கருத்துக்களை பகிர்ந்ததோடு அல்லாமல் இதழ்களுக்கு அனுப்புங்கள் என்றும் அறிவுறுத்தினர். அதன் பேரில் அப்போது தெரிந்திருந்த ஒரே இதழான விகடனுக்கு சில கவிதைகள் அனுப்பி வைத்தேன். பதில் எதுவும் இல்லை. கவிதைகள் பிரசுரமாகவும் இல்லை. சிலமுறை அனுப்பிப் பார்த்து பின் கைவிட்டுவிட்டேன்.  முதன்முதலில் "சஞ்சிகை" மாத இதழுக்கு கவிதை வேண்டி இதழ் ஆசிரியரும் நண்பருமான முருகராஜ் என்னை அணுகினார். பிறகு என் கவி

எழுத்தும் நானும்

Image
மனிதனுக்கான கலையில் என்னளவில் எழுத்தே தலையாயது. அது என்னவோ நல்ல எழுத்தினை உண்டாக்கும் எழுதுகோல் எனக்கு மந்திரக் கோலாகவே தென்படுகிறது. அது மட்டுமல்லாது எழுத்தாளர்கள் மாய உலகில் வாழ்பவர்கள் என்று சிறுவயது முதலே ஒரு பிம்பம் மனதின் மீது பதிந்ததாலோ என்னவோ நானும் ஒரு மந்திரக் கோலை பற்றிக்கொண்டு அம்மாயா உலகில் சஞ்சரிக்க வேண்டுமென்ற பேராசை சமீபமாய் ஒட்டிக்கொண்டது.  என் முதல் எழுத்து அல்லது எழுத்துக்கான தருணம் என்பதை நான் உணர்ந்தது எனது பதிமூன்றாம் வயதில். ஐந்து வரி கொண்ட முதல் கவிதையை அப்போது எழுதியிருந்தேன். எட்டாம் வகுப்பு பயின்றுகொண்டிருந்த நான் ‌எழுதிய முதல் கவிதையை என் வகுப்புத் தோழி அமுதாவிடம் காட்டினேன். முழுவதையும் இரண்டு மூன்று முறை படித்தவள் உனக்கொன்னும் ஆகலல என்றாள். அது ஒரு கவிதை  படிப்பவருக்கு அப்படியே புரிய வேண்டும் என்றில்லை என்ற தெளிவெல்லாம் அப்போது இருக்கவில்லை. மேலும் இது எனக்கான திறமை என்று உணர்த்தவோ ஊக்குவிக்கவோ எந்தச் சூழலும் அப்போது இல்லை என்பதால் அடுத்ததாக எதையுமே எழுதவில்லை.  நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பனிரெண்டாம் வகுப்பில் கவிதை எழுதி வர வேண்டும் என்று

Antarjali Jatra (1987)

Image
Antarjali Jatra (1987) Goutam Ghosh - Indian director Kamal Kumar Majumdar - Indian writer இன்னும் ஓரிரு தினங்களில் இறக்கவிருக்கும் ஒரு முதியவருக்கு அழகிய இளம்பெண்ணை மணமுடித்து அந்த முதியவரின் சடலத்தோடு உடன்கட்டை ஏற்ற ஏற்பாடு செய்கின்றனர் முதியவரின்  குடும்பத்தினர். முதலில் மறுத்து அழுது மன்றாடினாலும் பிறகு வேறு வழியின்றி அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிறாள் இளம்பெண். சதி வழக்கத்தின்படி இறந்த கணவனின் சொத்துக்கள் உடன்கட்டை ஏறும் பெண்ணின் குடும்பத்தாரைச்  சேரும். வறுமையின் பிடியில் இருக்கும் தன் குடும்பத்தை மீட்க மகளை சதிக்கு பலிதர தயாராகிறார் இளம்பெண்ணின் தந்தை. மரபிலேயே ஊறிப்போன ஒரு கலாச்சாரத்தை மீறுவதில் உள்ள அசௌகரியம் என்னவென்பதை அழகாக உரைத்துச்செல்கிறது திரைப்படம். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதிகளின் பிரதிநிதியாகிறாள் யசோவதி. ஒரு முன்னேற்றத்திற்கும் மீறலுக்குமான எதுவுமே இல்லாதக் காலங்களில் இப்படியான மூடநம்பிக்கைகளின் பேரில் சதி போன்ற அநீதிகள் தொடர்ந்து நிகழ்ந்திருப்பது அக்காலத்தின் பெண்களுக்கான துயரம். மாற்றம் முதலில் தனக்குள் நிகழ வேண்டும். அ