Posts

Showing posts from July, 2023

HALAL

Image
Halal" (Shivaji Lotan Patil Indian film director) இசுலாமிய மதத்தின் அடிப்படையில் கணவன் மனைவியை பிரிய நேரிடுமேயானால் கணவன், மனைவியின் மூன்று மாதவிடாய் காலம் வரை காத்திருந்து முறையே ஒவ்வொரு மாதமும் ஒருமுறை தலாக் என்று மூன்று முறை மனைவியின் முன் உரைத்தால் அவர்களின் திருமணம் உறவு முடிவுற்றதாய் நம்பப்படுகிறது. இதை "முத்தலாக்" என்கின்றனர். ஒருவேளை இந்த மூன்று மாதகாலம் இடைவெளியில் பெண் கர்ப்பம் தரித்தால் பின் பேறுகாலம் முடிந்தபிறகு தலாக் உரைக்கப்பட்டுகிறது. இதன் முன்னேற்றமாக முத்தலாக்கிற்கு இப்போது யாரும் மூன்று மாதங்கள் வரை அதாவது மனைவியின் மூன்று மாதவிடாய் காலம்வரைக் காத்திருப்பதில்லை உடனுக்குடன் உரைக்கப்பட்டுவிடுகிறது.  மலையாளத் திரைப்படம் 'பிரியாணி'யில் கணவன் தன் மனைவிக்கு தலாக் தலாக் என்று மூன்று வார்த்தைகளைக் குறுஞ்செய்தியில் அனுப்பி அந்த உறவை முடிப்பதாகக் காட்சியிருக்கும். எப்படி சொன்னால் என்ன. நம்பிக்கையின் அடிப்படையில் அந்த வார்த்தையை உரைத்துவிட வேண்டும். தன் வாழ்வில் அதிமுக்கியமான ஒரு உறவை முடித்துக்கொள்வதில் இருக்கும் எந்தவித சல