Posts

Showing posts from March, 2025

சிலநேரங்களில் சில மனிதர்கள்:

Image
பணியாற்றிய காலங்களில் வகுப்பைக் காட்டிலும் அதிகமாக மரத்தடியில் பாடம் கற்பிப்பதை வழக்கமாக்கி இருந்தேன். இயற்கையோடு இயைந்த கல்வியாக அது இருக்கும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும் ஒருகாலத்தில் அதே மரத்தடியில் அமர்ந்து நான் படித்த நினைவுகளின் தூண்டுதலும் இன்னொரு காரணமாக இருந்தது.  சில வேளைகளில் அதேப் பள்ளியில் நான் ஓடி ஆடிய நினைவுகள் எழுவதுண்டு. அச்சமயங்களில், இப்போதிருக்கும் கல்விமுறையால் வகுப்பில் நிகழும் உரையாடல் போன்றோ கற்றல் கற்பித்தல் போன்றோ ஏன் ஒருபோதும் நான் படித்த காலத்தில் நிகழவேயில்லை என்ற கேள்வியும் ஏக்கமும் தோன்றி மறைவதுண்டு.  ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால் இன்னும் சற்று புரிதலோடும் ஈடுபாட்டோடும் படித்திருக்கலாம். இதனால் தான் எனக்கு படிப்பில் அத்தனை ஆர்வமில்லாமல் போனதோ என்றும் தோன்றுவதுண்டு. அனேகமாக தொண்ணூறுகளில் வாழ்ந்த பெரும்பாலான மாணவர்களின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.  எனக்கு படிப்பில் ஆர்வமில்லாததால் பள்ளி நாட்களை நான் வெறுத்தேன். முக்கியமாக எனது பத்து வயது வரை. எப்படியாவது என்னை ஏமாற்றி வீட்டில் யாராவது பள்ளிக்கு அழைத்துவந்து வி...