Posts

Showing posts from January, 2025

சிலநேரங்களில் சில மனிதர்கள்:

Image
முதுகலை முதலாம் ஆண்டு படிக்கையில் விடுதி அறைக்குப் புதிதாக ஒரு பெண் வந்து சேர்ந்தார். பெயர் சோபியா. எனக்கு மட்டும் தான் அவள் புதியவளாக தெரிந்திருந்தாள் போல. விடுதியில் மற்ற எல்லோருக்கும் ஓரளவிற்கு பரிச்சயமான பெண்ணாகவே இருந்ததாகத் தோன்றியது. என் அறை மாணவிகள் சிலருக்கு அவள் எப்போதோ ஒருமுறை நெருங்கிய தோழியாக இருந்துள்ளாள் என்பதும் அவள் வந்திருந்த இரண்டொரு நாட்களில் அறிந்துகொண்டேன். இருப்பினும் யாரும் அவளோடு இப்போது நெருங்கிப் பழகுவதாகத் தோன்றவில்லை.  சோபியா நல்ல உயரம். ஐந்து அடிக்கு மேல் இருக்கலாம். தொட்டு எடுத்து கண் இமைகளில் தீட்டிக்கொள்ளும் கண் மை கருப்பு அவள் நிறம். ஆனால் நல்ல இலட்சணமான முக அமைப்பு.  பொருட்கள் வைத்துக்கொள்ள  எனக்காக ஒதுக்கப்பட்ட அலமாரிக்கு மேல் பகுதியில் இருந்த அலமாரி சோபியாவுக்காக ஒதுக்கப்பட்டது. ஒருமுறை நான் என் அலமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்த சமயம் சோபியாவின் சில துணிகள் என் மீது விழுந்தன. இதை எதிர்பார்க்காத சோபியா பதற்றத்தோடு சாரி பாப்பா என்று கூறிக்கொண்டே துணிகளை எடுத்து மீண்டும் அடுக்கினாள்.  பரவால.. தெரியாமத்தான விழுந்தது.. ப்ர...

அனாகத நாதம்:

Image
அனாகத நாதம்: செந்தில் ஜெகன்நாதன்  சொற்றுணை பதிப்பகம் வெளியீடு. இந்த நூல் செந்தில் ஜெகன்நாதனின் இரண்டாவது நூல். முதல் நூல் மழைக்கண்.  செந்தில் ஜெகன்நாதனின் படைப்புகள் எளிய மனிதர்களின் வாழ்வினை அதன் இயல்பிலேயே பேசிச் செல்பவை. அனாகத நாதமும் எட்டு சாமானிய மனிதர்களின் வாழ்வினை அந்தப் பாதையிலேயே சொல்லிச் செல்கிறது.  எட்டுக் கதைகளும் எட்டுவிதம்.  செந்தில் ஜெகன்நாதனின் கதைகளில் தந்தை என்ற கதாப்பாத்திரம் நீங்காமல் இடம் பிடித்துவிடுகிறது. தந்தை இல்லாத மனிதன் இங்கு யாரு? இதற்கேற்ப இவர் கதைகளில் விரும்பும் மனிதராகவும் வெறுக்கும் மனிதராகவும் அடிக்கும் மனிதராகவும் அரவணைக்கும் மனிதராகவும் முதலில் தந்தையாகத்தான் தான் இருக்கிறார்.  சாயை கதையில் வரக்கூடிய ஒரு பாத்திரம். படப்பிடிப்பு தளத்தில் காக்கைகளை ஓட்ட நியமிக்கப்பட்ட  ஒரு பணியாள் குறித்த கதை. இந்தப் பணியே இதுவரை நான் கேள்விப்படாத ஒன்றாகத் தோன்றியது. இக்கதையிலும் ஒரு தந்தை இருக்கிறார்.  தம்பொருள் கதையின் முடிவில் ஒரு இனம்புரியாத கனமும் கந்தவேலுவின் அமைதியும் அவரது டிவிஎஸ் எக்ஸெல் சத்தமும் நம்மையும் பீடித்...