I Am Not a Witch , கொட்டுக்காளி:
ஓர் எட்டு வயது சிறுமி சூனியக்காரி என்று ஊர்க்காரர்களால் அடையாளப்படுத்தப்படுகிறாள். மேலும் சிறுமி சூனியக்காரர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் முகாமில் இணைக்கப்படுகிறாள். முகாமில் மிக இளம் வயது சூனியக்காரியான சிறுமிக்கு அங்கிருக்கும் மூத்த பெண்மணி ஒருவர் சூலா என்று பெயரிடுகிறார். சூலாவின் முதுகில் ஒரு நீண்ட ரிப்பன் கட்டப்படுகிறது. ரிப்பன் அளவிற்கேற்றதொலைவு அவள் நடந்து செல்லலாம். ஓடலாம். அவளுக்கானப் பணிகளை செய்யலாம். அந்த முகாமில் சூனியக்காரிகள் என அடைக்கப்பட்டிருக்கும் மற்ற பெண்களுக்கும் இதே நிலைதான். தங்களது உடலில் ஒருபாகமாய் ரிப்பனின் இணைப்பைச் சுமந்தே திரிகின்றனர். இயக்குநர் Rungano Nyoni இப்படி ஒரு படைப்பை நம் முன் வைக்கிறார். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இது ஒரு பெண்ணிய மற்றும் சமூக நோக்கில் எடுக்கப்பட்ட படம் என்று விளங்கும். இயக்குநர் வினோத்ராஜின் "கொட்டுக்காளி" எனும் நவபடைப்பின் வீச்சும் அத்தகையது தான். குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு காதலை அல்லது காதல் குறித்த ஏதோ ஒரு எண்ணம் தோன்றிய ஒரு பெண். அப்பெண்ணின் எண்ணத்தை மாற்ற அல்லது...