Joyland (Saim Sadiq)
ஆதி காலத்தில் பெண்கள் பிள்ளைகளைப் பெற்று பேணிக் காப்பதிலும் தன் வாழ்விடத்தைச் சுத்திகரித்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலும் முழு காலத்தையும் கழித்தார்கள் என்பது வரலாறு. காரணம் பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாள முடியும். அனேகமாக அந்த பொறுப்பினை அவர்களாகவே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். வேட்யையாடுதலைக் காட்டிலும் மிகவும் சிரத்தையான இப்பணிகள் பிற்காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. திருமணம் என்ற குடும்பமுறை சடங்கின் அடிப்படையில் ஒரு பெண் மீதான அத்தனை அடக்குமுறைகளும் இன்றுவரை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது மறுப்பதற்கில்லா உண்மை. இதற்கு மாறாக அப்போதே அவள் வேட்டையாடுதலை தேர்வு செய்திருந்தால் மனிதர்களின் தோற்றத்திலும் அதனால் ஏற்படக்கூடிய சமூக முன்னேற்றத்திலும் கணிசமான தோய்வு ஏற்பட்டிருக்கலாம். படம் பேசுகிறது: பழமை மாறாத ஒரு ராணா குடும்பத்தில் நிகழும் சில சம்பவங்கள் தான் இந்தப்படம். (ராணா என்பது குடும்பப் பெயர்.) ஒரு பெண்ணுக்கு தான் தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் பிள்ளை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அது அவளது பிள்ளை ...