மௌனியும் அம்மாவும்:

மௌனியும் அம்மாவும்: 


இந்த வீடு நீ எப்படி வரைஞ்ச மா? 

இது வந்து சின்ன வயசுல எங்க வீடு இப்படி இருந்துச்சு.

ஓ.. இப்படி தான் இருக்குமா?

ஆமா? அங்க ஒரு மரம் இருந்தது. பக்கத்துலையே ஒரு நிலாவும் இருந்தது. 

ஓ... என்னோட சின்ன வயசுல என்னோடு வீடு வானம் அளவுக்கு இருந்தது தெரியுமா? 

அப்படி‌யா? இப்பவும் நீ சின்ன பையன் தான?

ஆமா. ஆனா நான் சொல்றது முன்னாடி.. சின்ன வயசுல. 

முன்னாடினா?

நான் சொல்றது நீயும் கார்த்தியும் எனக்கு அம்மா அப்பாவா இல்லாதப்போ வேறொரு அப்பா அம்மா இருந்தாங்கள்ள அப்போ.. அந்த சின்ன வயசுல சொல்றேன்.. 

ஓ.. உனக்கு அதெல்லாம் நியாபகம் இருக்கா என்ன. 

ஆமா. 

அந்த அப்பா அம்மா பேரு என்ன? 

அவங்க பேரும் கார்த்திக் கீதா தான். 

அதெப்படி.. அப்போ அதும் நாங்க தான?

இல்லையே.. ஆனா நான் உன்னை பாத்துருக்கேன். 

எங்க பார்த்த.. 

அப்போ எங்க வீட்டு வாசல்ல விளையாடினேன். நீ அந்த வழியா போனியா அப்போ என்ன பாத்து என்ன டா குட்டி பையானு கூப்ட்ட. 

யாரு நானு? 

ஆமா.. நீ தான்.. 

நான் நம்ப மாட்டேன். 

நிஜமா தான். ‌

சரி.. நான் என்ன கலர் ட்ரெஸ் போட்ருந்தேன் சொல்லு பாக்கலாம். 

பிங்க் கலர் சேல போட்ருந்த.. 

பிங்கா? 

ம் உனக்கு அத்தான பிடிக்கும் . 

போதும் போதும்.. நம்பிட்டேன்.

ஓவியம்: மௌனி ❤️

Comments

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: