Paris, Texas (1984) (Wim Wenders)
சிறு வயதில் தோழியோடு தெருவில் விளையாடிகொண்டிருந்த ஒரு மாலையில் நாய்கள் தன்னை சுற்றி குரைத்தபடி தொடர்ந்து வர கையில் ஊன்றுகோளோடு ஒரு மனிதர் எங்களின் அருகில் நடந்து வந்தார். அதற்கு முன் அவரைப் பார்த்ததில்லை என்று தோன்றியது. அவர் காலில் ஒரு பெரிய காயம் இருந்தது. அந்த காயத்திற்கு மருந்தோ துணியாலான கட்டுகள் எதுவுமோ போடாமல் வெறுமனே விட்டிருந்தார். காயத்தில் அங்கங்கு இரத்தம் வடிந்து உலர்ந்திருந்தது. மேலும் காயத்தில் ஈக்கள் மொய்த்த வண்ணம் இருந்தன. அழுக்கான உடையோடு இருந்தவர் கையில் வேறெதையும் வைத்திருக்கவில்லை. எங்களை கண்டதும் அருகில் வந்து அப்படியே அமர்ந்தவர் 'பசியா இருக்கு சாப்பிட எதாவது தரியா பாப்பா' என்றார். வேறெதுவும் தோன்றாதவளாய் வீட்டிற்குள் நுழைந்து பாத்திரத்தை உருட்டினேன். ஒரு பாத்திரத்தில் இருந்த கஞ்சி சாதத்தில் சிறிது உப்பிட்டுவிட்டு வேறு ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். எதுவும் அகப்படாததால் கஞ்சி சாதத்தை சொம்பு நீரோடு கொண்டு வந்து இரண்டையும் அவரது கைகளில் கொடுத்துவிட்டு 'தொட்டுக்க எதுவும் இல்லண்ணா' என்றேன். இது போதும் சாமி.. என்றவர் கஞ்சியை கரைத்து ...