Posts

Showing posts from February, 2025

Loving (Jeff nichols)

Image
Loving (2016) - Jeff Nichols மனிதகுலத்தின் மிக நீண்ட வரலாற்றைத் தாங்கிப் பிடித்திருப்பது வீரமாக இருந்தாலும் அதற்கு இணையாக ஈடுகொடுத்து நிற்பது காதல். ஒரு காதல் என்ன செய்யும், ஒரு காதல் எல்லாமும் செய்யும். வேண்டுமென்றால் இந்த உலகை அழித்தொழிக்கும். மாறாக ஒரு புதிய உலகை படைத்தெடுக்கும். காதலில் எல்லாமும் சாத்தியம். கடந்த ஆண்டு பார்த்தப் படங்களில் மிக வியக்க வைத்த ஒரு காதல் கதை லவ்விங். உண்மையாக நடந்த கதை.  தயங்கி தயங்கி தான் கருவுற்ற செய்தியைத் தன் காதலனிடம் கூறுகிறாள் மைல்ட்ரெட். அதைக் கேட்ட மாத்திரத்தில் மகிழும் காதலன் அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். அதோடு தன் காதல் மனைவிக்கு அழகான‌ ஒரு வீடு கட்ட முயல்கிறான். கருப்பர்கள் மீது உச்சபட்சமான தீண்டாமையை, வெறுப்புணர்ச்சியைக் கடைப்பிடிக்கும் அந்த ஊரில் வெள்ளை ஆண்மகனான ரிச்சர்ட்க்கும் கருப்புப் பெண்மணியான மைல்ட்ரெட்டிற்கும் கலப்புத் திருமணம் நடந்து முடிகிறது.   வெர்ஜினியாவின் ஒரு பகுதியில் வாழும் இவர்களின் திருமணம் அப்பகுதியின் சட்டத்திற்குச் செல்லுபடியாகாது என இருவரையும் கைது செய்கின்றனர். ஆனால் மைல்ட்ரெட...