Posts

Showing posts from August, 2024

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
கதைகள் கேட்பதில் எப்போதும் அலாதி இன்பம் எனக்கு. கை நிரம்ப குவிந்திருக்கும் மிட்டாய்களைப் போல் கதைகள் எப்போதும் மனதிற்கு நிறைவான தித்திப்பை அளிப்பவை.  சிறு வயதில் ஒரு நாள் இரவு பிள்ளைகள் அனைவரும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தோம். இப்போதும் நினைவிருக்கிறது தெரு விளக்குகளின் மணம் கமழும் நாட்கள் அவை.. மல்லிகா சித்தி என் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தாள். தோழி ஒருத்தி ஓடி வந்து சித்தி கதைக்கூறுகிறாள் என்று எங்களுக்கு கூற அனைவரும் சித்தியின் அருகில் ஓடிச் சென்று அமர்ந்தோம். நாங்கள் வந்ததையோ அமர்ந்ததையோ பொருட்படுத்தாத சித்தி பாட்டியுடனான உரையாடலை நிறுத்தாமல் தொடர்ந்திருந்தாள். "இப்பல்லாம் ஒரே வெக்கையா இருக்குது அத்தை. அதான் கதவை திறந்து வச்சிப் படுத்துக்குறேன். அப்போ கூட தூக்கம் வரல.  கதவெல்லாம் அப்படி தெறந்து வச்சிட்டு தூங்காத புள்ள.. திருடன் கிருடன் வந்துட போறான். என்றாள் பாட்டி அவள் பங்குக்கு. ஆமா.. திருடன் வரானாம் திருடன். என்ன இருக்குது திருட அங்க.. சல்லி பைசா கூட வெக்காம மொத்தத்தையும் குடிச்சிபுட்டு போய் சேந்துட்டான் மனுசன். என்னமோ எம்பொழப்ப்பு இப்படி போவுது.. சரி இ...