சில நேரங்களில் சில மனிதர்கள்:
மௌனிக்கு கண் பரிசோதனைக்காகச் சென்றிருந்தேன். வழக்கமாகச் செல்லும் சாலை ஒன்றின் ஓரத்தில் எப்போதும் கண்ணில்படும் கண் மருத்துவமனை அது. ஆனால் அன்றுதான் முதல் முறையாக உள்ளே சென்றிருந்தேன். இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்றினைப்போல் காட்சியளித்தது மருத்துவமனை. உள்ளே மருத்துவமனை சுவற்றில் கண்களின் அமைப்புப் படங்கள். மற்றும் கண்களை பராமரிக்கவென சில ஆங்கில வாசகங்கள். அந்த மருத்துவமனைக்காக வழங்கப்பட்ட சில விருதுகள். சில நற்சான்றிதழ்கள் போன்றவை வரவேற்பு அறையின் ஒருபக்கம் சுவர் ஓரமாக காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. காத்திருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் அழகான குட்டிவிலங்குகள் விளையாடிக்கொண்டிருந்தன. உள்நுழைந்தவுடன் மருத்துவமனைக்கான எழுதப்படாத வழக்கத்தைப்போல் பெயர் முகவரி குறித்த விவரங்களை வாங்கிக்கொண்டு காத்திருப்பு அறையை காட்டினார் ஓர் இளம் செவிலி. நான்கு நான்கென மூன்று வரிசையாக இருந்த இருக்கைகளில் முதல் வரிசையில் ஒரு இசுலாமிய தம்பதியரும் இறுதி வரிசையின் வலது ஓரத்தில் இளம் பெண் ஒருத்தியும் இடது ஓர இருக்கையில் நாற்பதை கடந்தவர்போல் தோற்றமளித்த சிவப்பு ...